இராமநாதபுரம்
பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி

இராமநாதபுரம் :
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மு.ஹாஷினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி ஐ.சபீர்பானு அவர்களால் மூவாயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
