General News
ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட முதுவை பெண்

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட முதுவை பெண்
ஷார்ஜா :

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில்
உள்ள புத்தக அரங்கில்
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த
பஜிலா நிஜாமுதீன் எழுதிய ‘தி பிளாட்
பிரின்சஸ்’ என்ற ஆங்கில நாவலை ஈடிஏ அஸ்கான் குழுமத்தின்
மனிதவளத்துறை முன்னாள் அதிகாரி கீழக்கரை எம். அக்பர் கான் வெளியிட
நூலாசிரியர் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் அவரது பெற்றோர் நிஜாமுதீன், பாரிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனது முதல் நாவலை எழுதி வெளியிட்ட பஜிலா நிஜாமுதீனுக்கு
இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

