மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சேதுகவி ஜவ்வாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சேதுகவி ஜவ்வாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை
மதுரை :
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சேதுகவி ஜவ்வாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது ஏ.டி.பி. துரைராஜ் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந் து நடத்தப்பட்டது.
ஆய்வறிஞர் முனைவர் சு. சோமசுந் தரி வரவேற்புரை நிகழ்த்தினார். உலகத்தமிழ்ச் சங்க இயக்குநர் பொறுப்பு முனைவர் ஒளவை அருள் தலைமை தாங்கினார்.
ஏ.டி.பி. துரைராஜ் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வி.எஸ். ஜான் கண்ணன் முன்னிலை வகித்தார்.
சேதுகவி ஜவ்வாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் எனும் தலைப்பில் ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில் பழனியப்பன் செட்டியார் தனக்கு குழந் தை பாக்கியம் இல்லாத காரணத்தால் அதற்கு அருள்பாளிக்க ஜவ்வாது புலவரைக் கேட்க அவர் பாடியது கொடுமளூர் முருகன் பதிகம் ஆகும். இது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந் து வருகிறது.
இப்பதிகம் பாடுவதால் தமிழ்க்கடவுள் முருகன் அருளால் வேண்டியது நிறைவேறும். இப்பதிகம் மூலமாக ஸ்தல விருட்சங்களையும், சூரசம்ஹார நிகழ்வையும் முருகனின் மறுபிறவி சம்பந் தர் என்பதையும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் பாடுவதால் பில்லி, சூனியம், மரணத்தை தரும் நோயும் விலகும். செல்வம், கல்வி, சந் தான பாக்கியம் கிட்டும் என்பதையும் சைவம், வைணவம் இரண்டையும் ஒன்றிணைப்பது இப்பதிகம் ஆகும்.
தொல்காப்பியர் கூறிய இறை ஒன்றே என்பதையும் இப்பதிகம் வலியுறுத்துகிறது. ஜவ்வாதுப் புலவர் தீண்டாமையை எதிர்த்தவர். இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அவைக்களப் புலவர் ஆவார். அவரது எட்டாவது தலைமுறையாகப் பிறந் தவன் நான் என குறிப்பிட்டார்.
ஆய்வு வளமையர் முனைவர் ஜ. ஜான்சிராணி நன்றியுரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.