பரமக்குடி Z4 நிறுவனத்தாரின் கடைதிறப்புவிழா
பரமக்குடி Z4 நிறுவனத்தாரின் கடைதிறப்புவிழா 08-11-2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினர்களாக இளையான்குடி ரஷீதிய்யா அரபுக்கல்லூரியின்முதல்வர் அஷ்ஷைகு முஹம்மது ராஜுக் மன்பயீ ஹஜ்ரத், முதுகுளத்தூர் பெரியபள்ளிவாசல் தலைமை இமாமும், மாநில மன்பயீ பேரவை பொருளாளருமான அஹமதுபஷீர்சேட் ஹஜ்ரத் கலந்துகொண்டார்கள்.
இவ்விழாவை பரமக்குடி பன்னூலாசிரியர் அக்பர்பாதுஷா மன்பயீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
தேரிருவேலி தலைமை இமாம் அலி பாதுஷா மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தினார். பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம் ஜலாலுதீன் மன்பயீ நன்றியுரை கூறினார்.
இறுதியாக லால்பேட்டை மத்ரஸா மன்பவுல்அன்வார் அரபுக்கல்லூரியின்முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காஜியுமான ஷைகுல்ஜாமிஆ அல்லாமா நூருல்அமீன் ஹஜ்ரத் துஆ ஓதி(னார்கள்). விழா இனிதேநிறைவுற்றது. அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!