General News

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் அவதூறாக பேசி வரும் நரசிங்கானந் மற்றும் ராம்கிரி என்கிற பயங்கரவாத கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணாம்பட்டு நகர காவல்நிலையத்தில் IUML சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் V.முஹம்மத் தையூப் சாஹேப் அவர்கள் தலைமையில்,
IUML நகர தலைவர் ஆலியார் உவேஸ் அஹமது , IUML நகர து.தலைவர் முஹம்மத் ஹம்ஸா,IUML நகர செயலாளர் V.ஜபர் அஹமது MSF மாவட்ட அமைப்பாளர் அப்சர் பாஷா, நகர MSF அமைப்பாளர் யாசர் அரஃபாத் , இணைய அமைப்பாளர் அஹத் ஜைன், மற்றும் நகர IT WING ஜாகிர் உசேன், சமில் அஹமத் மாநில செயற்குழு உறுப்பினர் முதாஸ்ஸிர் ஹசன் நிர்வாகிகள் நுவுமான்,தல்ஹா,பிலால்,ஜயித்,ஆதம்,ஆயாஸ் அஹமது சப்பான்,பவுஜான் அனைத்து நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் பயங்கரவாதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு அளிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button