General News
இந்திய பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்கள் செயல்படாது
இந்திய பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்கள் செயல்படாது
இந்தியாவின் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 29 இரவு 8 மணிமுதல் செப்டம்பர் 2 மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30 நடைபெற இருந்த ஆவண சரிபார்ப்பு நேர்க்காணல்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் ஆகஸ்டு 30ஆம் தேதி பொது விசாரணை அரங்குகள் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.