கவிதைகள் (All)

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா

சத்திய ரமலான்…!!!
முடிந்ததா அந்த
முப்பது நாள் மோகனம்
பறந்ததா எங்கள்
சுவனத்தின் வாகனம்
நடந்ததா நதி நீர்
நகர்ந்ததா தென்றல்
பிறந்ததா புதுப் பிறை
பிரிந்ததா ரமலான் ?
சுவனம் இன்னொரு
சுவனம் சென்றதா
புவியின் கவனம்
இதன்மேல் பட்டதா ?
நோன்பே தனக்கொரு
நோன்பு திறந்ததா
வையகம் வாழ்த்தி
மெய்யகம் சென்றதா?
உயிர் வளர்த்த
இறையருட்  பயிர்
கதிர் அறுத்ததா
களம் நிறைத்ததா ?
விழுந்து கிடந்த
வேதனைச் சாத்தான்
எழுகின்றானா விருப்புடன்
மீண்டும் வருகின்றானா
மாய வேலைகள்
பண்ணுகின்றானா – நமை
மயக்கிப் போட
எண்ணுகின்றானா
ஆசை வீணையை
மீட்டுகின்றானா
அவனது வேலையைக்
காட்டுகின்றானா ?-இறையுடன்
ஒட்டிய உறவினை
வெட்டுகின்றானா -சுவனம்
தட்டிய கைகளைத்
தட்டுகின்றானா ?
ஒருமாதமிங்கே
தவமாய் இருந்தோம்
அருளின் வழியில்
நயமாய் இருந்தோம் – வரும்
பதினோரு மாதமும்
மனப்பத்தியம்  இருப்போம் -இறை
சத்திய சிந்தனை
புத்தியில் தொடர்வோம்!
அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button