கத்தார் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
தோஹா : கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி 26.07.2013 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கத்தார் காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் கடலூர் முஹம்மது முஸ்தபா பங்கேற்றார். அவர் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் பணிகளை விவரித்தார். தாய்ச்சபையில் இணைந்து அது மேலும் வலுப்பெற கத்தாரில் செயல்பட்டு வரும் காயிதே மில்லத் பேரவையில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்வில் பி. அப்துல் அஜீஸ், அஹமது அன்வர், அன்வர் அலி, சையது அப்துல் ரஹ்மான், சீனி நைனார் முஹம்மது, ஃபக்ருதீன் நைனா முஹம்மது, முஹம்மது முஹைதீன், ஃபக்ருதீன், சிக்கந்தர் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிக்கந்தர் செய்திருந்தார்.
புகைப்படங்களைக் காண :
https://www.facebook.com/muduvai.hidayath/media_set?set=a.1306904991855.47612.1207444085&type=1