நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு
தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ முனைந்த மக்கள் முந்தைய செவிவழிப்பெற்ற பாடல்கள் வடிவில் இஸ்லாத்தை அறிய நாட்டம் கொண்டுள்ளனர். அவர்கள் தேட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய வரலாறு நபியவர்கள் நபி (ஸல்) குடும்பத்தினர். தோழர்கள் போராட்ட வாழ்வு போர் அரபி மொழியில் பாடல் வழிக் கதைகளாகப் படைத்திருந்துள்ளனர். அவை தமிழக முஸ்லிம்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன மொழி மாற்றப்பட்டன. படைப்போர் இலக்கியம் என்றழைக்கப்படுகின்றன. கி.பி. 1700 லிருந்து நான்கு நூற்றாண்டுகள் முஸ்லிம் புலவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். பன்னிரெண்டு தலைப்புகளில் படைக்கப்பட்டவைகளில் ஏழு தலைப்புகள் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன. ‘சல்கா’, ‘செய்யிதத்து’, ‘அலியார்’, ‘சக்கூன்’, ‘காசீம்’, ‘மலுக்கு முலுக்கு’, ‘நபுசு’ படைப்போர் இந்நூலாசிரியர் முனைவர் திருமலர் மீரான்பிள்ளை படைப்போர் இலக்கியத்தை முழுமையான ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார்.
தமிழகப் புலவர்கள் ‘படைப்போர்’ பெயரில் பதிவு செய்த பிறகுதான் மலையாள முஸ்லிம்கள் பின் தொடர்ந்து ‘படைப்பாட்டு’ படைத்திருக்கின்றனர். தமிழகத்தில் சில கற்பனைகள் கலக்கப்பட்டது போல் கேரளத்தில் படைக்கப்படவில்லை. வரலாற்று நிகழ்வோடு பொருந்திக் கொண்டுள்ளனர். அலி (ரலி) பாத்திமா (ரலி) பெயரர் காசீம் நிக்காஹ் முடிந்த கணத்தில் போருக்குச் செல்லும் நிலை. ஷஹிதாகின்றார். மனைவியும், தாயும் கண் கலங்கி நிற்கின்றனர். உயிர் பிரிந்திருந்த காசீம் உடல் எழுந்து தான் சுவனம் சென்றுவிட்டதாகக் கூறி மீண்டும் உயிரற்ற உடலாகும் செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது சான்று. ‘படைப்போர்’ இத்தலைப்பு போருக்குக் காரணமானவர்களுடனான பெயர்களுடன் அமையப் பெற்றவையென முந்தைய ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர். அவ்வாய்வு பொருந்தாது. அலியார், செய்யிதத், சல்கா, காசீம் போருக்குக் காரணமாகாதவர்கள். அவர்கள் பெயருடன் படைப்போர் காப்பியங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
ஆகவே, முன்பு எதிரிகளாக இருந்தோர் பெயரிலேயே படைக்கப்பட்டிருப்பதை நோக்க முடிகிறது. நூலாசிரியர் ஆய்வு முடிவு இது. முஸ்லிம்கள் ஆட்சிக் காலத்தில் தான் படைப்போர் இலக்கியம் மக்களிடம் எடுத்தாளப்பட்டன. மக்கள் மனநிலைக்கேற்ப கதைகள், பாடல்கள் வடிவில் காப்பியங்களாக, உருவகக் குறியீட்டு வடிவங்களில் தோற்றுவிக்கப்பட்ட நிலையையும் கூறிச் செல்கிறார். ஒவ்வோர் படைப்போருக்குள்ளும் சுழலும் கதை மாந்தர் பட்டியல். படைப்போரின் மையப்புள்ளி. கருத்து, செய்தி, வருணனை, போர்க்காட்சி, படை விவரம். படை எண்ணிக்கை கிளைக் கதை. கதை முடிவு. படைப்போர் நூல்கள் கண்ட பதிப்புகள். ‘பா’ க்களின் யாப்பு வகை. பா கணக்கு. எந்தெந்த பகுதியினர் படைப்போர் இலக்கியம் படைத்தனர்.
ஆசிரியர் மூல நூல் ஆசிரியர் குறித்த தகவல். கடலுக்குள் மூழ்கும் ஒருவர் ‘தான்’ காணும் அரிய வகைகளை மேலே கொண்டுவந்து காட்சிக்கு விருந்தாக்குவார். இந்நூலாசிரியர் படைப்போர் இலக்கியக் கடலுக்குள் மூழ்கி கண்டுபிடிப்பு நடத்தி மூழ்கி கண்டுபிடிப்பு நடத்தி சிந்தனைக்கு விருந்தளித்திருக்கிறார். முயற்சி, உழைப்பு பாராட்டுக்குரியது. முதல் மனிதரான “ஆதம் நபியின் ஐம்பத்தோராம் தலைமுறை நபிநாதர்” இத் தகவல் அலியார் படைப்போர், நபுசு படைப்போர் இரண்டிலும் கிடைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். உமறும் தனது சீறாப்புறாணத்தில் “மருளினி லுருவாய்த் தோன்றியே யாதத் தைம்பதின் தலைமுறைப் பின்னர்” என்று கூறியிருக்கிறார்.
இஸ்லாத்தை ஆழ்ந்து உள்வாங்கிய அறிஞர்கள் இக்கூற்றை அபத்தம் என்கின்றனர். ஒரு தலைமுறை 25 ஆண்டுகள். 50 தலைமுறை 1250 ஆண்டுகள். ஆதம் நபிக்கு பிறகு ஈஸா நபி வரை 24 நபிகள். பல ஆயிரம் ஆண்டுகள். நீண்ட காலத்திற்குப் பிறகு ரசூலுல்லாஹ் வருகின்றார்கள். இது அவர்கள் வாதம்.
நன்றி
முஸ்லிம் முரசு
ஜுலை 2012