General News
எண்ணம் பூக்கும்
—— கவிஞர் ஹிதாயத்துல்லா, இளையான்குடி ————-
சுவனம் சென்றிட
துயரம் வென்றிட
தொழுகை செய்யுங்கள் !
சுகமே கண்டிட
சுவையே வந்திட
தொழுகை செய்யுங்கள் !
கவனம் மனதினில்
கடவுள் ஆணையைக்
கருத்தில் வையுங்கள் !
கவலை ஏகிட
களிப்பாய் ஆகிட
தொழுகை செய்யுங்கள் !
புவனம் தழைத்திட
பூமான் நபிகளின்
சுவடைப் பாருங்கள் !
பொலிவாய் வாழ்ந்திட
புன்னகை சேர்ந்திட
தொழுகை செய்யுங்கள் !
எவரும் இன்னும்
தொழுகா திருந்தால்
எடுத்துக் கூறுங்கள் !
எண்ணம் பூத்திடும்
இன்பம் சேர்ந்திடும்
என்றே கூறுங்கள் !
( கதிர்கள் எனும் நூலிலிருந்து )