கவிதைகள் (All)
தனிமை!
ஐயப்பன் கிருஷ்ணன்
Iyappan Krishnan <jeevaa@gmail.com>
வழிவாசல் விழி தேடும் யாருமின்றி
பாழுமனம் தனியாக உறாவாடும்
கழிவிறக்கம் மனமேறும்.. கண்ணீர்
விழிவழியே நிதம் உருண்டோடும்
பாழுமனம் தனியாக உறாவாடும்
கழிவிறக்கம் மனமேறும்.. கண்ணீர்
விழிவழியே நிதம் உருண்டோடும்
சில்லிட்ட சிந்தனையில் .. பல நினைவு
சொல்லிச் சொல்லி சிரித்து நிற்கும்
எதையெதையோ வாய்பேசும் அடடா
கத்தியழ மனம் கூசும்.
செவிவழியில் குரல் கேட்கும் அந்த
மணித்துளிக்காய் மனம் நாடும்
ஒருநாளில் தவறிடினோ.. உறுதியிலா
உள்ளமெல்லாம் தடுமாறும்
மெல்லியதோர் சுடுமூச்சு… கழுத்தில்
இதமாக பாவிவரும்..
சட்டென்று திரும்பையிலே.. அங்கு
வெறும் சுவற்றில் கண்மோதும்
இன்றேனும் முடியவென்று இறைவனை
தினந்தோறும் கேட்டுவைக்க
இது நாளை வரும் நாளையென்று -தனிமை
நித்தம் சொந்தம் கொண்டாடிவரும்
***
—