உள்ளுர்

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

DSC_0023 (1)துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் தாயகத்திலிருந்து வருகை புரிந்த முன்னாள் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 13.06.2013 வியாழக்கிழமை மாலை அல் முஹைஸ்னா பூங்காவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹெச் இப்னு சிக்கந்தர் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார்.  பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சென்னை ஈடிஏ மெல்கோ பொதுமேலாளரும், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் முன்னாள் தலைவர் ஹெச். ஹஸன் அஹமதுவுக்கு வரவேற்பு அளித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அவர் தனது ஏற்புரையில் அமீரகத்தில் முதுவை வாசிகளை ஒன்றிணைத்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தாயகத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து பெரிமிதம் தெரிவித்தார். இதற்காக பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ரமலானை முன்னிட்டு இஃப்தார் நிகழ்ச்சி மேற்கொள்வது, 2013-14 ஆம் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு இலவச தனிப்பயிற்சி வகுப்பு நடத்துவது, புதிய நிர்வாகம் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரவு செலவு கணக்கு குறித்த விபரங்களை பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் சமர்ப்பித்தார்.

நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள் சீனி முஹம்மது, ஏ. ஜாஹிர் ஹுசைன், அஹமத் இம்தாதுல்லாஹ், ஹபிப் திவான், சாதிக், ஜாபர், ரஹ்மத்துல்லா, காஜா, ஜாவித், சேக், அசன், உமர் முக்தார், செய்யது, இஸ்மத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

More Photos :

http://www.facebook.com/media/set/?set=a.10201255996701107.1073741893.1207444085&type=3

 

DSC_0010 (1)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button