யா முஸ்தஃபா
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்
1.யா முஸ்தஃபா நீர் ஆரம்பமாய் வந்த ஒளியே
( யா நபியே நீங்கள் )
அந்த ரஹ்மான் தந்த அகிலத்தாரின் அருட்கொடையே
அர்ஷ், குர்ஸி, வானம், பூமி உங்கள் ஒளியின் வழியே
நீங்கள் வரவில்லையென்றால் இந்த புவியுமில்லையே
( யா முஸ்தஃபா யா முர்தழா )
2. யா முஸ்தஃபா நீர் பிறந்த நாளும் திருநாளே
அது உம்மத்தவர் எல்லோருக்கும் பெருநாளே
உம்ம் புகழ்பாடி திளைப்போம் எங்கள் வாழ்நாளே
இதை மறுப்பவர் வாழும் நாட்கள் வீண் நாளே
( யா முஸ்தஃபா யா முர்தழா )
3.யா முஸ்தஃபா நீர் எழுதுகோலால் எழுதவில்லை
அந்த எழுதும் கோலே நீர் தான் அதனால் தேவையில்லை கல்விச்சாலை சென்று பாடம் எதுவும் படிக்கவில்லை
கற்றுக் கொடுத்தவன் அந்த ரப்பேதான் வேறெவருமில்லை.
( யா முஸ்தஃபா யா முர்தழா )
4. யா முஸ்தஃபா நீர் விண்ணைவிடவும் உயர்ந்தீரே
இலந்தை மரமும் தாண்டி இறைவனை நெருங்கி சென்றீரே
வில்லின் முனைகளை விடவும் அருகில் ரப்பை கண்டீரே
ரப்பை நாங்கள் காண தொழுகை கொண்டு வந்தீரே
( யா முஸ்தஃபா யா முர்தழா )
5. யா முஸ்தஃபா நீர் நற்குணத்தின் மேல் இருப்பவரே
மக்கள் செய்த அத்தனை இன்னலையும் பொறுத்தவரே
தரமறுத்தவர் கரத்தில் கஃபா சாவியை தந்தவரே
படைக்கப்பட்டவர் அத்தனை பேரிலும் நீர் தான் சிறந்தவரே
( யா முஸ்தஃபா யா முர்தழா )
6. யா முஸ்தஃபா நீர் முகத்தைக் காட்ட நாடுகின்றேன்
அந்த நாளும் எந்த நாளோ என்று ஏங்குகின்றேன்
எந்தன் கனவில் வந்து காட்சி தரவே வேண்டுகின்றேன்
அதை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் உறங்குகின்றேன்
( யா முஸ்தஃபா யா முர்தழா )
7. யா முஸ்தஃபா நீர் கவுசர் அருகில் இருக்கையிலே
நாங்கள் வருவோம் தாகம் தீர்த்திட உங்களருகினிலே
அன்று எங்கள் முடிவு இருக்கும் ரப்பின் கரங்களிலே
வேறெவருமில்லை பரிந்துரைசெய் யவ்வுலகினிலே
( யா முஸ்தஃபா யா முர்தழா )
இன்ஷா அல்லாஹ் தொடரும்
அ. முஹம்மது மஹ்ரூஃப்