கவிதைகள் (All)
பூர்வீகம்
பூர்வீகம்
இது பலருக்கும்
புரிய முடியா ஒரு
கார் மேகம்
கார் மேகம்
இதை பூக்களிடம் கேட்டால்
அதில் இல்லை
தார்மீகம்
பூக்களுக்கும் உண்டு
பூர்வீகம்
மாக்களுக்கும் உண்டு
பூர்வீகம்
ஆனால்
மக்களுக்கு மட்டுமே
இதை அறிவது
ஆன்மிகம்
பூர்வீகம்
அறியப் போகும்
அறியுகம்
வெகு தூரம் இல்லை
அந்த புது யுகம்
பூர்வீகம் அதை
அறிவதே தெய்வீகம்
புறப்பட்ட இடம்
புரிந்து கொண்டால்
புலரும் ஒரு
புது சுகம.;
-ராஜா கமால்-