General News

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

 

மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம் மற்றும் வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்கள், கல்வியியல், இளைஞர் நலம், நாடகம், குறும்படங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறும்.

 

நூல்கள் 2012-ல் வெளியானவையாகவும், குறும்படங்கள் 2012-ல் தயாரிக்கப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படுபவைக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்

.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் கவிதை, சிறுகதை, குறும்படங்கள் எதுவானாலும் 4 பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி 10-4-2013.

 

ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், 420 ஈ, மலர் காலனி, அண்ணாநகர், சென்னை-600 040 என்ற முகவரிக்கு படைப்புகளை அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9444107879 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

 

நன்றி :- தினமணி, 05-02-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button