கவிதைகள் (All)

பர்தாப் போடுதல் சரிதான்!

வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து

..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான்

வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற

…வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் 

மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்

…மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப்

பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப்

…பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!

  

 

 

 

கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக்

…காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால்

பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள்

…பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை

மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச வேண்டும்

….மலிந்துவரும் இக்கொடுமை நீங்க வேண்டி

கண்ணிமைபோல் பெண்களையும் காத்து நிற்கும்

….காலத்தின் கட்டளையாம் பர்தா என்பேன்

 

 

 

 

ஆதிவாசி அன்றிருந்தாள் அறியா வேளை

…ஆடைகளை உடுத்தவுமே தெரியா மூளை

ஓதியோசித் துணரத்தான் தந்தான் திட்டம்

…ஓரிறையின் மறைதனிலே ஆடைச் சட்டம்

ஆதிவாசிப் போலிருந்தால் கூழாங் கல்லு

…ஆறறிவு பெற்றவளா நீயும் சொல்லு

பாதிபாதி உடையணிந்தால் உன்றன் மேனி

…பார்ப்பவர்கள் கண்கட்குத் தானே தீனி!

 

 

 

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

 

 

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button