கவிதைகள் (All)
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2013
வாழ்க்கைப் பயணத்தில்
அங்கீகாரம் அவசியம் எனில்
மதிப்பும் மேன்மையும் உண்டாக
அன்புபொங்கும் மனதோடு
வாழ்த்துவோம்!
மனிதவாழ்வு மலர
இலட்சியம் சாட்சி எனில்
ஆசைகளும் கனவுகளும் நனவாக
அன்புபொங்கும் மனதோடு
வாழ்த்துவோம்!
சமுதாய நலனில்
கடமை கருத்தில் எனில்
உண்மையும் உழைப்பும் உயர
அன்புபொங்கும் மனதோடு
வாழ்த்துவோம்!
கலைகளின் சங்கமத்தில்
காட்சிகள் கண்ணில் எனில்
அறிவும் ஆக்கமும் வளர
அன்புபொங்கும் மனதோடு
வாழ்த்துவோம்!
நிலையில்லா வேளையில்
பொறுமை வெறுமை எனில்
அமைதியும் ஆனந்தமும் கிடைக்க
அன்புபொங்கும் மனதோடு
வாழ்த்துவோம்!
இயற்கையின் கூட்டில்
பரமனின் பாதம் எனில்
பக்தியும் சக்தியும் உணர
அன்புபொங்கும் மனதோடு
வாழ்த்துவோம்!
நித்தியத் தேவைகளில்
நிதர்சனம் வேதம் எனில்
நீயும் நானும் சமமாக
அன்புபொங்கும் மனதோடு
வாழ்த்துவோம்!
நட்புடன்,
திருமதி. மீனாகுமாரி பத்மநாதன்
meena_kumari_p@hotmail.com