பிறந்த நாள்
சுக பிரசவத்தால்,
பிறந்தது குழந்தை,
பிஞ்சிளம் குரலில்,
வெடிப்பான நீண்ட,
நிறுத்தாத அழுகை,
பிறந்ததும் உடனே,
குழந்தை அழ வேண்டும்,
இந்த குழந்தை என்னாமா,
அழுகுது பார் என்று
உற்சாக கூக்குரல்கள்,
அழுகையின்,
சத்தம் கூட கூட,
உறவினர்களின்,
சந்தோஷமும் கூடியது,
மகிழ்ச்சியால்,
கேலி, கிண்டல்கள்,
சிரிப்பொலிகள்
கருவறையில்,
நானிருந்த போது
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே..
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே,
இப்படியல்லவா,
என் தாய் பாடினாள்,
அவள் பாடியது,
பொய்யாகுமா?
மூடிய கண்களால்,
அனைவரையும்,
உணர்வுகளால்,
முறைத்து பார்த்து,
நான் எதற்காக
அழுகிறேன் என்று தெரியுமா?
உறவால்,அனுவால்,
கருவாய், கருவறையில்,
உயிராய் பிறந்தேன்,
இதுதான் என் முதல்,
பிறந்த நாள்
ரத்தக்கட்டியாய் வளர்ந்தேன்,
எழும்புகள் பூட்ட பட்டேன்,
சதைகள் போர்த்தப் பட்டேன்
உடலுறுப்புகள் பெற்று,
வளர்ச்சியடைந்தேன்,
நிம்மதியான வாழ்க்கை,
பிரச்சனை இல்லை,
மாசு கட்டுபாடு இல்லை,
தூசு துப்பட்டா இல்லை,
வாய் வழியாய் உணவில்லை,
கீழ் வழியாய் மலஜலம் இல்லை,
வெட்கமில்லா மேனி,
துக்கமில்லா தூக்கம்,
மூச்சு திணராமல்,
நீரினுல் மகிழ்ந்தேன்,
மிதந்தேன், நீந்தினேன்,
இறைவா உன்
வாக்கை மீறி
ஷெய்த்தானின் தூண்டுதலால்
சொர்க்கத்திலிருந்த,
ஆதமும் ஹவ்வாவும்,
பூவுலகம் வந்தார்கள்,
கருவறை சொர்க்கத்தில்தான்,
ஷெய்த்தானில்லையே,
உன் வாக்கை
மீரவில்லையே, ஓ..
கருவறை சொர்க்கத்தில்,
பத்து மாதங்கள்தான்,
தங்குமிடமோ,
சொர்க்கவாழ்வு முடிந்து,
மண்ணுலகத்தில்,
பிறந்திருக்கின்றேன்,
இது எனக்கு இரண்டாவது,
பிறந்த நாள்
இறைவா
மருபடியும் நான்
உன்னை வந்தடைய
ஒரு வழியே நேர் வழி
இங்கோ பல வழி உள்ளது,
எது உன் வழி
அறிய செய்வாய்,
நான் சீக்கிரமாக
சொர்க்கத்திற்கு வர வேண்டும்,
இதை நினைத்துதான்,
என் அழுகை,
நீங்களோ அறியாது,
சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள்!
விருதை மு.செய்யது உசேன்.