General News

உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட …

உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட நாம் உண்ணும் உணவுகளே பிரதான நோய் தடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.

அரைக்கீரையின் பயன்களும் அப்படித்தான்/ நோய் தீர்க்கும் அரும் மருந்தாக உதவுகிறது.
அரைக்கீரை அதிக அளவிலும்/ தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் கீரையுமாகும். அரைக்கீரை இதன் விதை இரண்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இந்த கீரையில் அற்புதம் தரும் பயன்கள் உள்ளன. இதில் வைட்டமின்களும்/ தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. பல்வேறு பக்குவங்களில் இக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். அபார ருசியையும்/பசியையும் உண்டுபண்ணும் இக்கீரை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முக்கிய உணவாகும்.

பிரசவித்த பெண்களுக்கு சீதளம் வராமல் பாதுகாக்கும்.உடலுக்கு பலத்தையும், சக்தியையும் கொடுக்கும். கீரையின் சத்துக்கள் பெருமளவில் தாய்ப்பாலில் கலப்பதால, குழந்தையையும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இக்கீரையை மிளகு ரசத்துடன் கலந்து உட்கொண்டால் உடல் நலமடையும். அரைக்கீரையை பழைய புளியுடன் கடைந்து சாப்பிட்டு வந்தால் பித்த சுரம்/ வாய் ருசியற்றுப்போதல், பசி இல்லாத நிலை போன்றவை குணமாகும். அரைக்கீரையுடன் பூண்டு, மிளகு, பெருகாயம் ஆகியவற்றை சோத்து மசியல் , குழம்பு, பொரியல் செய்து சாப்பிட வாதம், வாய்வு தொடாபான உடல் வலிகள் நீக்கி விடும்.

நாள்தோறும் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் எதுவும் ஆகாது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் களுக்கு இந்தக் கீரையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடா வலி, மண்டை பீனிச நரம்பு வலி, ஜன்னி தலை வலி, கன்ன நரம்பு புடைப்பு ஆகியவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். இக்கீரை மலமிளக்கியாகவும் திகழ்கிறது. குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் தீர, உணவாக இக்கீரையை கொடுக்கலாம். அரைக்கீரை விதைகளை இடித்துக் கூழ் போல காய்ச்சி உணவாக உட்கொள்கின்றனா. இக்கீரை விதை யில் தயாரிக்கப்படும் தைலம் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் தலைமுடி மின்னி கருமையாகவும், செழித்து வளரவும் செய்கிறது. இத்தனை அற்புதங்களை அரைக்கீரை தரும்போது இதனை உணவில் யாரும் சோக்கவா மறப்பார்கள்> எங்க கிளம்பிட்டீகளா அரைக்கீரையை வாங்கவா..

தயிர்

1850ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஒருவர் மதுக்கடை ஒன்றும் அதன் அருகிலேயே யோகர்ட் கடை ஒன்றும் (தயிர் போன்றது) திறந்தார். யோகர்ட் கடையில் வியாபார் பிய்த்துக்கொண்டு போக, பலவிதமான இனிப்புச் சுவை சேர்க்கப்பட்ட தயிரைத் தயாரித்து பெரும் கோடீஸ்வரரானார்!

இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

தயிரில் உடலுக்கு அழகைத் தரும் ‘அழகு வைட்டமின்’ என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்க வல்லது. கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண் நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. கரு நன்கு முதிர்ச்சி அடையவும், பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும், குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது. எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயர் சாப்பிடுவது நல்லது.

பூப்படையத் தாமதம், மாதவிலக்குக் கோளாறுகள் முதலியவற்றையும் தயிர் மாமருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் உள்ள பெண்களுக்கு பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்களே மிகவும் குறைவு. காரணம், காலையில் தயிர் சேர்த்து சப்பாத்தி, ரொட்டி இவற்றைச் சாப்பிடுவதுதான் என்கிறார்கள். கொழுப்பு குறைவாக இருக்கும் விதத்தில் கோதுமைமாவுடன் பருப்பு மாவைக் கலந்து ரொட்டி சுடுகின்றனர். மிஸி ரொட்டி என்ற பெயருள்ள இந்த ரொட்டியைத் தயிரில் தவறாமல் தோய்த்து எடுத்துச் சாப்பிடுகின்றனர்.

தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப் தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.

கால்சியத்தினால் பற்களும் உடம்பும் எண்பது, தொண்ணூறு வயதுக்குப் பிறகும் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த உண்மையை நோபல் பரிசை வென்ற ரஷ்ய பாக்டீரியாலஜிஸ்ட்டான பேராசிரியர் எலிக் மெட்ச்ஜிக்கோப் கண்டுபிடித்தார்.

மேலும் இவர் பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டார். எல்லோரும் டீ, காபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசை, வயிறு, குடல் முதலியவற்றில் உள் அமிலத்தன்மையைச் சரிசெய்து ஆரோக்கியம், இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது.

கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை, சொறி சிரங்கு, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலியவை தயிரும் மோரும் சேர்த்தால் விரைந்து குணமாகும்.

தயிர்சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம், இவற்றில் உள்ள கால்சியமும், பாஸ்பரஸும்தான்.

சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ, காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழி காட்டும்.[/quote]
கூடுதல் தகவல் பெற
http://medilifeinfo.com/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button