சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும்
நகை சுவையாலே புன் மனதும் ஆரும்.
[சிரிச்சா போதும்]
புணிதத்தின் தன்மையில் நகை சுவை வேண்டும்,
புரம் பேசிதானே நாம் நகைக்க வேண்டாம்.
மெய்யானதாக நகை சுவை வேண்டும்,
பொய்யான கூற்றை நாம் உறைக்க வேண்டாம்.
பினி போக்கும் மருந்தாம்.
முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய்,
தப்பது முறிய நாம் சிரிப்போம் நன்றாய்.
[சிரிச்சா போதும்]
அறிவொளியும் கூடும் நகை சுவையாலே,
அறியாமை நீங்கி புது பொழிவை காண்போம்.
சிநேகங்கள் கூடி சிரித்திட வைக்கும்,
விநோதங்கள் செய்து வியப்பதனை காட்டும்.
ஒற்றுமையை கூட்டும்
எம்மதமும் இங்கே சங்கமம் ஆகும்,
சம்மதமும் சந்தோஷ மகிழ்வினை தேக்கும்.
[சிரிச்சா போதும்]
விருதை மு செய்யது உசேன்