வளைகுடா
கூலிங் ஹார்ட்ஸ்-இதயங்களை குளிர்வித்தல்

கிரீன் குளோப் சார்பாக, கடும் வெய்யிலயும் பொருட்படுத்தாமல் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் நலன் கருதும் மனிதநேய பணியான , கூலிங் ஹார்ட்ஸ்-இதயங்களை குளிர்வித்தல் நிகழ்வின் இவ்வருடத்தின் நான்காம் பகுதி நிகழ்வு துபாய் AG நிறுவன கட்டுமான வளாகத்தில்
ஆகஸ்ட் 29 காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்விற்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார். நிகழ்வில் சுமார் 500 தொழிலாளர்களுக்குபழச்சாரு தண்ணீர், லபான், பிஸ்கட், நட்ஸ், பழங்கள், ஆகியவை அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்வினை கிரீன் குளோப் உறுப்பினர்கள் ரஸூல், , தாஹிர்,
சாபீர், மற்றும் தன்னார்வளர்கள்⁷ ஒருங்கிணைத்தனர்.இறுதியாக நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.






