முதுவை இளம் சாதனையாளர் : ஜுபைர் அஹமது

Vinkmag ad

துபாயில் பயின்று வரும் முதுவை இளைஞரின் மருத்துவத் துறையில் ஒரு புது முயற்சி !

 

துபாய் : பிட்ஸ் பிலானி ( BITS PILANI – Dubai Campus ) துபாயில் B.Tech Bio Technology பயின்று வரும் முதுகுளத்தூர் இளைஞர்ஜுபைர் அஹமது ( வயது 20 ).

 

இவர் ஸ்டெம் செல்ஸ் மற்றும் திசுக்கள் பொறியியலில் மிகுந்த ஆர்வம் கொண்டு இது சம்பந்தமான ஆய்வு மேற்கொள்வதில் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவழித்து வருகிறார். இவ்வாய்வின் மூலமாக மனித உடலில் உள்ள செல்கள் மூலம் ஒருவரது உடலில் ஏற்படும் மருத்துவக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற ஒரு புது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சென்னையின் ஆட்டோஸ்டெம் ஆய்வகத்தில் தனது நான்கு மாத விடுமுறையின் போது இவ்வாய்வினை தொடர்ந்துள்ளார். இதற்கு தனது தாத்தாவும், பிரபல மருத்துவருமான முதுகுளத்தூர் டாக்டர் ஏ அமீர் ஜஹான், அவரது புதல்வர் டாக்டர் ஏ. நசீருல் அமீன் மற்றும் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

 

கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற உலக மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்று அவரது ஆய்வுகளை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவரது தந்தை என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் துபாய் ஈடிஏ அஸ்கான் குழுமத்தில் துணைப் பொதுமேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

சாதனை படைக்க காத்திருக்கும் ஜுபைர் அஹமதை வாழ்த்துகிறார் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசகர் எஸ். சம்சுதீன்

DSC_0014 (1)

 இன்றைய 02.01.2014 Thursday ஷார்ஜாவிலிருந்து வெளி வரும் Gulf Today நாளிதழில்
GT3
GT2
GT1

News

Read Previous

24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவை : முதல்வர் துவக்கினார்

Read Next

பஸ் போக்குவரத்து காணாத கிராமங்கள்

Leave a Reply

Your email address will not be published.