மரம் நடுவோம் பாதுகாப்போம்
மரம் நடுவோம் பாதுகாப்போம்
————————————–
🌳மரம் நடுவது-இன்று
விழாவாய் விளம்பரமானது!
தன்னை முன்னிறுத்தும்-மூத்த
தலைவரின் முன்னிலையில்!!
🌳பசுமை வளர்ப்புக்கு-இங்கு
பாத்தியம் பெறப்படுகிறது…
நடும் போது இருக்கின்ற…
ஆர்வமும் அறிமுகமும்!
🌳நட்டதை நல்ல மரமாய் வளர்ப்பதில்…
நாட்டம் கொள்வது இல்லை!
🌳இது பொது நலமென்ற போதும்-இதில்
பெருமளவு ஒழிந்திருப்பது சுயநலமே!
🌳பசுமைக்கு வித்திடுவதால் மட்டும்!
முழுமரமாகி விடாது…
மண்ணில் இட்டதை உயிராக்கி வளர்ப்பதே!.
உலகுக்கு நாளை அது பலனாகும்.
-கவிஞர் சேக் சாகிபு.