வாழ்நாளில் அன்பளிப்பை ஏற்காத அற்புதர் கலாம்: ஏன்? ஏன்? ஏன்?

Vinkmag ad

வாழ்நாளில் அன்பளிப்பை ஏற்காத அற்புதர் கலாம்: ஏன்? ஏன்? ஏன்?

மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காத அற்புத மனிதர்.

தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார். அதையும் மீறித் தந்தாலும், அவற்றை அந்தஇடத்திலேயே விட்டுவிடுவார்.

குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் வந்த எந்த அன்பளிப்பையும், ஓய்வு பெற்ற பிறகு தன்னுடன் தான் கொண்டு சென்று இரண்டுசூட்கேஸ்களில் தனது உடை மற்றும் புத்தகங்களை (தான் பணம் கொடுத்து வாங்கியவற்றை மட்டும்) எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

கலாம் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். பள்ளியின் சிறந்த மாணவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் வீட்டில் மின்சாரம்கிடையாது. ஒருநாள் வீட்டில் மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் சத்தமாகப் பாடம் படித்துக் கொண்டிருந்தார் கலாம். ராமேசுவரம் திருட்டுப் பயம்இல்லாத ஊர் என்பதால் கலாம் வீட்டுக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அபோது அம்மா தொழுகையில் இருந்தார். வீட்டுக்குள் ஒருவர் நுழைந்தார். கலாமிடம் அவர் தந்தை ஜைனுல்லாபுதீனைப் பற்றி விசாரித்தார்.வீட்டுக்குள் கலாமின் அம்மா தொழுகையிலிருந்து பாதியில் எழ வழியில்லாத அளவுக்கு இறைவனை தொழுது கொண்டிருந்தார். வந்தவரின்கையில் ஒரு தாம்பூலத்தட்டு இருந்தது. ‘சரி, இந்தத் தாம்பூலத் தட்டை நீ வாங்கிக் கொள்’ என்றார். யோசித்த கலாம், அம்மாவிடம் கேட்கலாம்என்றால் அவர் தொழுகையில் இருக்கிறார். வாங்காமல் போனால் வந்தவரை அவமானப்படுத்தும்படியாக ஆகிவிடும். வேறு வழியில்லாமல்கலாம் அந்தப் பரிசுப் பொருளை வாங்கிக் கட்டிலில் வைத்துவிட்டார். தாம்பூலத்தை கொண்டு வந்தவர் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்.

தாம்பூலத் தட்டில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு பாக்கெட் எல்லாம் இருந்தன. பஞ்சாயத்துத் தேர்தலில் கலாமின்தந்தை வெற்றி பெற்று பஞ்சாயத்து வாரியத் தலைவர் ஆனதால் அவருக்கு லஞ்சம் கொடுக்கவே அந்த மனிதர் கலாம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

இது தெரியாமல் கலாம் அவர் கொடுத்ததை வாங்கி வைத்துக் கொண்டார். தந்தை வீட்டுக்குள் வந்தபோது கலாம் நடந்ததைச் சொன்னார்.அவ்வளவுதான். கலாமின் தந்தைக்குத் கொந்தளித்த கோபம் கலாமைத் தாறுமாறாக திட்டி தீர்த்தார். கோபம் அடங்காமல் முதுகில் ஓர் அடியும்அடித்துவிட்டார். அடி வாங்கிய கலாம் கலாம் அழ ஆரம்பித்தார்.

பின்னர் கோபம் தணிந்த தந்தை கலாமை அருகில் அழைத்து, இதுபோன்ற பரிசுப் பொருள்களைத் தருபவர்கள் ஒரு குறுகிய நோக்கத்தோடுசெயல்படுகிறவர்கள்.

நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது.

உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக்கொடுக்கப்படுகின்றன. இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும், என்று அறிவுரை செய்தார்.

அன்று பிஞசு மூளையில் குடியேறிய அறிவுரை தான் உச்சத்தின் உயர்வில் இருந்து உறக்கத்திற்கு செல்லும் வரை கடைபிடித்தார் கலாம்.

தந்தையின் அறிவுரைப்படி நடந்ததால் மக்களின் குடியரசுத் தலைவராக போற்றப்பட்ட மகான் கலாம்.

குடியரசுத் தலைவர்கள், ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறும்போது, குடியரசுத் தலைவர் அமரும் அசோக சக்கரம் பொறித்த நாற்காலியையேஎடுத்துக் கொண்டு சென்றபோது பாதுகாவலர்கள் பார்த்து மீட்டு சென்றார்கள் என்பது அன்றைய செய்தி.

 

News

Read Previous

இளைய இந்தியாவின் கனவுத்தந்தை !

Read Next

“ஹஜ் வழிகாட்டுதல்” நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *