வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்

அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு , வைரமுத்து படைப்புகளிள் மனித உறிமைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் நான் பெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக திரு வைரமுத்து அவர்களிடம் நடத்திய நேர்கானல் இதோ உங்கள் பார்வைக்கு! வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள். வினா நிரல் :   1.    ஒரு சமூக படைப்பாளியான நீங்கள் மனித உரிமை என்னும் தளத்தை எவ்வாறு காண்கிறீர்கள்? படைப்பு மட்டும் அல்ல அமைப்புகள், வாழ்க்கை முறை, மதம், இலக்கியம் எல்லாமே மானுடத்தை […]

Read More

கர சேவகரே வருவீரா

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..) இணைக்க வேண்டும் கர சேவகரே வருவீரா காடுகள் மலைகள் திருத்த வேண்டும் கர சேவகரே வருவீரா வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும் கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள் நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள் படைப்பதற்கில்லை வித்துன்னும் பறவைகள் விதைப்பதில்லை விளைந்த கேடு வெட்கக் கேடு சுதந்திர இந்தியா ஐம்பதாண்டு […]

Read More

ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன். எம்.ஜி.ஆருக்கே மரணமா? எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது. காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர் இவைகளெல்லாம் […]

Read More

மதுரை பற்றி..

  மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)   பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்         பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்         தோகைமார்தம் மெல்லடியும்             மயங்கி ஒலித்த மாமதுரை – இது             மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்         நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்         அழுந்தப் பதிந்த சுவடுகளும்             காணக் கிடைக்கும் பழமதுரை – தன்             கட்டுக் கோப்பால் இளமதுரை! மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்         மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி – இவை         கொள்ளை அடித்த வையைநதி             நாளும் ஓடிய நதிமதுரை – நீர்             நாட்டிய மாடிய பதிமதுரை தென்னவன் நீதி பிழைத்ததனால்         தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்         கந்தக முலையில் எரிந்ததனால்             நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று             ஜாதிக் கஞ்சும் தென்மதுரை! […]

Read More