தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்

   புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம்   எங்கும், கொண்டாடும் திருநாள் ======= இறைவனின் ஆணை, கனவை நனவாக்கினார் தியாக நபி இபுராஹிம் அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை, பாலை தனில் விட்டுச் சென்றார் எங்கும் கொடும் வெப்பம், அக்னியை சுமந்த அனல் காற்று, தனலை தாங்கிய குன்றுகள், தங்கிட குடிலில்லை, இளைப்பாற கூடாரமில்லை, தனிமை சூளலால்  படபடப்பு, யாருமற்ற வெருமையின் தகிப்பு, கொண்டு […]

Read More

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

—  கவிஞர் அத்தாவுல்லா — இனிய மாலை நேரம்! இஸ்லாமிய இதயங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னேரம்! புதிய  இளைய  முதற்பிறை எழில் வானத்தில் கோலம் வரையக் காத்திருக்கும் நேரம்! சுவனத்தின் தென்றல் ஒருமாத காலம் பூமியை வலம்வரும் நேரம்! கொடுமைகள் – வன்மைகள் தீமைகள் -பகைமை நரகச் சூடுகள் மாண்டழியும் நேரம்! அலையும் மன சாத்தான்கள் காட்டப்படும் நேரம் ! இந்த பூலோகம் எங்கணும் இறைப்புகழிலும் நபிப் புகழிலும் நிறையும் நேரம்! ஒளுவின் துளிகளில் உண்மைகள் உயிர்க்கும் நேரம்! […]

Read More

ரமளான் நல்வாழ்த்துகள்

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.) அகத் தூய்மையின் மாட்சியிலும் புறச் செயல்களின் மாண்பிலும் ஐம்புலன் அடக்கலின் வெற்றியிலும் பொருள் சுத்தமுறும் ஜகாத்திலும் இறை நெருக்கம் தரும் நேசத்திலும் ஈருலகச் செம்மை காணும் அமல்களிலும் மாசற்ற மகத்துவம் பெற்றிட- நோன்புக் கடலில் முத்தெடுக்க- இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்… ரமளான் நல் வாழ்த்துகள்… வஸ்ஸலாம், அன்பு, சேமுமு

Read More

* * * பொங்கல் வாழ்த்து * * *

* * * பொங்கல் வாழ்த்து * * * மங்கல அணியும் பொட்டும் . . மரகத மணிபோற் கண்ணும் குங்கும நுதலும் தண்டைக் . . குலுங்கிடும் காலும் மஞ்சள் தங்கிய முகமும் வண்ணத் . . தடம்பணைத் தோளும் கொண்ட மங்கையர் கைபார்த் துண்ண . . மலர்கவே பொங்கல் நன்னாள். பூச்சிறு மழலை மேனி . . புத்துடை நகைகொண் டாட ஆச்சியர் துணைவர் சேர . . ஆனந்தத் தமிழ்ப்பண் பாட பாற்சுவை வழங்குநன் னாள் . . பழந்தமிழ் வளர்த்த […]

Read More

முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்

பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து, சாதனை வென்ற, முதுவை வெற்றியாளர்கள்! கெண்டையை போட்டு, விராலை பெருகின்ற, வியாபார நுனுக்கத்தால், கிராமத்திலிருந்தாலும், கிரிடமாய் பிரிடமாய், திகழ்கின்ற மேன்மக்கள்! அக்கறையோடு, அக்கரை தொட்டு, இக்கரை வந்து சக்கரை பேச்சால், எக்கரை வென்று,-அபு பக்கரை சார்ந்த சான்றோர்! கூடியே ஒற்றுமையால், கோடி பலன் கண்டவர்கள், நாடியே கல்வியினை, ஓடியே பயின்றவர்கள் […]

Read More

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2013

வாழ்க்கைப் பயணத்தில் அங்கீகாரம் அவசியம் எனில் மதிப்பும் மேன்மையும் உண்டாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   மனிதவாழ்வு மலர இலட்சியம் சாட்சி எனில் ஆசைகளும் கனவுகளும் நனவாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   சமுதாய நலனில் கடமை கருத்தில் எனில் உண்மையும் உழைப்பும் உயர அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   கலைகளின் சங்கமத்தில் காட்சிகள் கண்ணில் எனில் அறிவும் ஆக்கமும் வளர அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   நிலையில்லா வேளையில் பொறுமை வெறுமை எனில் அமைதியும் ஆனந்தமும் […]

Read More

தியாக‌த் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்

  அஸ்ஸ‌லாமு அலைக்கும்   அனைவ‌ருக்கும்   தியாக‌த் திருநாள்   ந‌ல்வாழ்த்துக்க‌ள்   ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அர‌பு அமீர‌க‌ம்   முதுகுள‌த்தூர்.காம்   முதுவை ஹிதாய‌த் India : 965 9644 786

Read More

வாழ்த்து மடல்

இறைவனுக்கே புகழ் அனைத்தும் 26.01.2011 புதன் கிழமையன்று நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின் அறுபதாண்டுப் பெருவிழாவில் கல்லூரியை வாழ்த்தி பாராட்டி வாசிக்கப்பட்ட வாழ்த்துமடல் ! அல்ஹம்துலில்லாஹ் ! இன்றென்ன … ஜமாலில்… ! எல்லோரும் புன்னகை உடுத்தியிருக்கிறார்களே….! இன்றென்ன …. திருவிழா…? எல்லோருடைய இதயத்திலும் உற்சாகம் …. வழிகிறதே….! அந்த வானத்திற்கு என்ன செய்தி போனது…? அதுவும் … தாகமாய் வந்து இங்கே! வரலாறு எழுதுவோர் உண்டு ! வரலாறு படைப்பவரும் […]

Read More

வாழ்த்த வயதில்லாதவர்கள் வணங்கலாமா?

அண்மைக் காலமாக அரசியல் கட்சிக்காரர்கள் தங்களுடைய தலைவர்களின் விசேட நாள்களில் அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்பிட்டு ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்று விளம்பரங்களின் மூலம் தெரிவிக்கிறார்கள். பல்வேறு வகைகளில் பலதெய்வ வணக்கக்காரர்கள் பத்தோடு பதினொன்றாக வணங்குவது பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.   ஆனால் ஏக தெய்வ வணக்கமுள்ள, ஒரே இறைவனை மட்டுமே வழிபட வேண்டிய முஸ்லிம் பெயருள்ளவர்கள் இப்படி ‘வணங்குவது’  பெரிய பாதகமாகும். ஈமான் கொண்டு இறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள் இவ்வாறு வணங்குவதை விட்டுவிட்டு, […]

Read More

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம் விளங்கியதே இம்மை வாழ்வு சிறந்திடவே! கனவில் கண்டார் பலியிடவே கருணை பரிசாம் இளம்மகனை! நினைந்தே உறுதி பெற்றிட்டார்  நிச்ச யமிது இறையாணை! அணைத்தே மகனை கேட்டாரே அவரும் ஒப்பத் துணிந்தாரே புனையா உண்மை தேடிடுவோம் புரிந்தால் நன்மை நமக்கன்றோ அறுக்கத் துணிந்தார்; அறவில்லை அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை பொறுத்துப் […]

Read More