உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த மனிதன் உலகம் உள்ளளவும் உலகினர் உள்ளங்களிலே சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் ! இது நியதி ! உறுதி !! இந்தியப் பூமியைக் கண்டெடுத்த கொலம்பஸ்; விமானத்தைக் கண்டு […]

Read More

முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு – எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்

“மூன்று பாகங்கள்” – குறித்த ஓர் அறிமுக ஆய்வு !   இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் பேரியக்கம் என பெருமைப்படத்தக்க முஸ்லிம் லீகின் நூற்றாண்டு கால வரலாறு தொகுக்கப்பட்டு மூன்று பாகங்களாக முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையினரால் மிகச் சிறந்த முறையில் வெளியிடப்பட்டுள்ளது. ‘வரலாறு அதை எழுதுகிறவர்களின் நோக்கத்தைப் பொறுத்தே அமைகிறது’ என்பார்கள் ! அந்த வகையில் “முஸ்லிம் லீகின் நடமாடும் ‘வரலாற்றுக் கூடம்’ என சிறப்பிக்கப்படும் எழுத்தரசு. ஏ.எம். ஹனீப் அவர்களால் இந்த மூன்று […]

Read More

பகைவனுக்கு அருளிய தகைமை

    அப்பாஸியக் கலீபா ஸஃப்பாஹ், தம் அமைச்சர், பெருமக்கள் புடைசூழத் தம் பூங்காவில் உல்லாசமாகப் பவனிவந்து கொண்டுள்ளார். அன்று கலீபா மிகவும் மகிழ்ச்சிகரமாகக் காணப்பட்டார். தம்மைச் சூழ வந்துகொண்டிருப்பவர்களுடன் அன்புடன் உரையாடிக் கொண்டு வந்தார். அப்பொழுது அவருடன் வந்து கொண்டிருந்தவர்களில் அவரின் மிகப்பெரும் விரோதியின் மகன் இளவரசர் இப்ராஹீமும் இருந்தார். அவருக்குக் கலீபா உயிர்ப்பிச்சை வழங்கி அவரை அன்புடன் ஆதரித்து அவருக்குத் தம் அரண்மனையிலேயே தங்க இருப்பிடம் நல்கிக் கெளரவித்து வந்தார். இப்பொழுது கலீபா இப்ராஹீமை […]

Read More

இருண்ட வரலாறு ஒளி பெற்றது !

  அ. மா. சாமி     இன்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிழைப்புத்தேடி அரேபியாவுக்குப் போகிறார்கள். ஆனால் அன்று – ‘சங்ககாலம்’ என்று சொல்லப்படும் தங்க காலத்தில் – அரேபியர்கள் வணிகம் செய்யத் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வழியாக இசுலாமிய சமயமும் தமிழ் நாட்டுக்கு வந்தது. இதுபோல, இலங்கையில் உள்ள ஆதம் மலையைத்தரிசிக்க அரேபியர்கள் வந்தார்கள். வணிகமும் செய்தார்கள். இலங்கை முழுவதுமே தமிழ் நிலமாக விளங்கிய காலம் அது. இவ்விதம் தமிழுக்கும், அரபு மொழிக்கும் இரண்டாயிரம் […]

Read More

எம்மைக் கவர்ந்த சமூக சமத்துவ புரட்சியாளர் !

  -க. குணசேகரன்   சமூகம் என்பது பல முரண்களைக் கொண்டுள்ள பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய அமைப்பு. இதற்குள் ஒருமித்த சமத்துவ நிலைமையைக் காண்பதென்பது இயலாதது. முரண்களைக் களைந்து, வர்க்க உணர்வுகளை அகற்றி அனைவரும் சமமானவர்கள் தான் என்று அவர்களை அறியச் செய்து ஒரு சமூகமாக உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இதை சாதித்தவரை புரட்சியாளர் என்று சொல்லலாம் வேறு எப்படி கூற முடியும். உலகளவில் வரலாற்றில் பதியப்பட்ட பல்வேறு சமூகங்களைப் பற்றிய விவரங்களில் பல […]

Read More

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ‘புஸ்ரா’ பயணம் ( வரலாற்று ஆய்வு )

A.M.M. காதர் பக்‌ஷ் ஹுசைன் ஸித்தீகி M.A.,   சிரிய அரபுக்குடியரசின் தலைநகர் டமாஸ்கள் (திமிஸ்க்) மாநகரிலிருந்து 1.45 கி.மீ தெற்கே ’டராஆ’ பிராந்தியத்தில் அமைந்துள்ளது தான் ‘புஸ்ரா’ 3400 ஆண்டுகளுக்கு முன்பே இந்நகர் குறிப்பிடத்தக்கதாக விளங்கியதுடன் ரோமானிய பேரரசின் பிராந்திய தலைநகராக திகழ்ந்தது இப்புரதான நகர். அக்காலத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனை ஆலயங்கள், பொதுகலையரங்கம், வசிப்பிடங்கள் இன்னும் அழிவுபட்ட நிலையில் அதன் அடையாளச்சின்னங்களுடன் காட்சி தருகிறது. அரேபிய தீபகற்பத்திலிருந்து அன்றைய ஷாம் தேசமான இன்றைய ஜோர்டான், […]

Read More

இராமநாதபுரம் அரண்மனை வரலாறு

காலப்பெட்டகம்   இராமநாதபுரம் அரண்மனை வரலாறு ( அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன் )   இராமநாதபுரம் அரண்மனையை சுற்றி பாதுகாப்புக்காக 44 கொத்தளங்கள் கட்டப்பட்டன. கிழவன் சேதுபதி காலத்தில் தான் இவை கட்டப்பட்டன. (காலம் 1678 – 1710). அரண்மனை நிர்வாகத்திற்காக (தர்பார் மண்டபம்) பக்கத்திலேயே ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதற்கு இராமலிங்க விலாசம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆட்சி செய்த மன்னர்கள் தினசரி இங்கே மக்களை சந்திப்பார்கள். விளையாட்டு வீரர்கள், கலைநிகழ்ச்சி நடத்துபவர்கள், புலவர்கள் […]

Read More

இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை

தென்றல் வரும் திசை, வந்த திசை எதுவானாலும் மனத்துக்கு இதம் தானே ! இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்று ஆய்வில் தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் தான் ! இருந்தாலும் வந்த மண்ணை வளமாக்கி, வரலாற்றில் புகழ் சேர்த்திருக்கிறார்கள். தூரவானம் தானே பூமி புன்னகைக்க மழை தருகிறது? அது போல இளையான்குடியைச் செழிக்க வைக்க வந்தவர்கள் என்று கூட நாம் இவர்களைச் சொல்லலாம். இவர்களின் பெருமைகள், அருமைகள் எல்லாம் வரும் அத்தியாயங்களில் மின்னிடக் […]

Read More

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள் சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர் ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ??? என படத்தில் பார்துள்ளோர் சிலரே ஆகலாம் !!!! பார்கக்காதவர் நிரலில் யானும் உள்ளேன் இணைய தளங்களில் உலாவரும்போது கண்டது பார்த்தவர் பார்க்காதவர் என எல்லொரும் காண அவரது சிலை இந்தியாவில் நாளந்தாவில் அவர் நினைவிடத்தில் உள்ளது படத்தில் கண்டேன் தாங்களும் காண்க நூ த லோ சு மயிலை selvindls61@gmail.com

Read More

காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு

கடலில் ஒரு துளியின் பங்கு-காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு. ”தன்னிற்சிறந்த தமிழும் தமிழ்வளர்த்த என்னிற்சிறந்த மறவர்களும்….” என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன்.இந்த வரிகளில், 1.தமிழ் தன்னிலும் சிறந்தது,2.அதை வளர்க்க வேண்டும்,3.பாவேந்தர் தமிழ் வளர்த்தார்,4.அவரை விடவும் தமிழைப் பெரிதும் வளர்த்தவர்கள் உள்ளார்கள்,5.அவர்களை மதிக்கும் பாங்கு பாவேந்தருக்கு இருந்தது,6.இந்தப் பண்பும்,தமிழ் வளர்க்கும் பாங்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும்….எனப் பல செய்திகள் உணர்த்தப் படுகின்றன. தமிழுக்கு யார் எந்த அளவுக்குத் தொண்டு செய்திருந்தாலும் அதற்குப் பதிவு வேண்டும்;தமிழ்த் தொண்டு […]

Read More