எங்க பூமி ராம்நாட்

  இராமநாதபுரம் மாவட்டம்னாலே வறட்சியான மாவட்டம்னு தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும்.மிஞ்சி,மிஞ்சி போனா இராமேஷ்வரம், கமல்ஹாசன், அப்துல் கலாம்  தெரியும். ஆனா இன்னும் நல்லசுவாரசியமான இடங்களும் பழமையை இன்றும் தன்னகத்தே கொண்டு புதுமையாய்  ஜொலிக்குது (தங்கசுரங்கம் இருக்குன்னு நம்பி வரவங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது மக்காஸ்) இராமநாதபுரம்   ப்ரிட்டீஷ்காரங்க கொள்கையை இன்னும் கடைபிடிக்கிற கூட்டம் எங்க மாவட்டத்துல இருக்காங்க. ஆமாநா கூட தான். எந்த ஊர்ன்னு கேட்டா ராம்நாட்’னு தான் சொல்லுவேன் 🙂 இடையில நிறையபேர் ஆட்சிசெய்தாலும்  ராம்நா என்று சொல்லும் போதே சேதுபதி ராஜாக்கள் தான் நினைவுக்கு வருவாங்க. சேதுகரையை ஆண்ட மன்னர்கள் என்பதால் சேதுபதி  மன்னர்கள் என்ற பெயர் வந்தது. இன்னைக்கும்அவங்க வாரிசுகள் வாழ்ந்துட்டு இருக்காங்க. புகழ்பெற்ற பல அவை நிகழ்ச்சிகள் நடந்த இராமலிங்க விலாசத்தில் ஓவியங்கள் வியக்க வைக்கும் தன்மையுடையது.  அரண்மனை பார்க்கும் சந்தர்ப்பம்கிடைத்தால் மறக்காம பாருங்க. இராமநாதபுரம் ஜமின் அரண்மனை பற்றிய அதிக விளக்கத்துக்கு இங்கே கிளீக்குங்கோ விவேகானந்தர் சிகாகோக்கு போனதே எங்க ராஜானால தானுங்கோ 🙂 இராமேஷ்வரம்   புண்ணியம் தேடி காசிக்கு போவார். அதுக்கப்பறம் இங்கே தான் வருவார்…. இராமநாதபுரத்துக்கே பெருமையும்,வருமானமும் சேர்க்கும்  பல சுற்றுலா இடங்கள் அடங்கிய இடம்,இங்குள்ள கோயில் ரொம்ப பிரபலம் […]

Read More