100 ஆண்டு நிறைவு கண்ட ராமநாதபுரம் மாவட்டம்

1910 ல் ஆரம்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 2010 ஜூன் 1 ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி மாவட்ட நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொன்மைச் சிறப்பும், சரித்திர மேன்மையும் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் 1910ஜூன் 1ல் உருவாக்கப்பட்டது. முன்பு மதுரை மாவட்டத்திற்குள் ராமநாதபுரம் கோட்டம் இருந்தது. மதுரை மாவட்டத்தின் நிர்வாக பணிச்சுமையை குறைக்கும் விதமாக ராமநாதபுரம் கோட்டத்தை அதிலிருந்து நீக்கி, அதனை கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க […]

Read More

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு பலனடையுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது. வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் கவனிக்கப்படுகிறது. எனவே தேவையுள்ளவர்கள் அவரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அளவில் தொடர்பு கொள்ள […]

Read More