ரமழான் புனித ரமழான்

    புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் இறைவனும் இறைத்தூதர் (ஸல்)அவர்களும் நமக்கு  தெளிவு படுத்தியுள்ளார்கள். இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய இந்த புனிதமிக்க  நோன்பு ஹிஜ்ரி […]

Read More

ரமழான் ஒரு விருந்தாளியல்ல, அழைப்பாளி!

ரமழான் வந்துவிட்டால் எம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள். ஆம்! இவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை ரமழான்களை வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமழானும் அவற்றுள் ஒன்றாக சென்றுவிடத்தான் போகிறது. சந்தேகமில்லை. எனினும், நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதே சந்தேகம்! ரமழான் வெறுமனே வந்துவிட்டுச் செல்வதற்காக வருகின்றதொரு மாதம் அல்ல. ரமழான் எங்களை அழைத்துச் செல்வதற்காக வருகின்ற மாதம். எனினும் அது எம்மை அழைக்கவில்லை போலிருக்கிறது. அல்லது அதன் அழைப்பு எங்களது செவிகளுக்கு எட்டவில்லை […]

Read More

ரமழான் பேசுகிறது !

  பீ. எம். கமால், கடையநல்லூர்) இதோ நான் வருகிறேன் உங்கள் பசியினைப்  பங்கு வைக்க ! சுட்டெரிக்கும் நெருப்பைச் சுமெந்தெடுத்துக்கொண்டு  நான் வருகிறேன் ! பாவங்களை மட்டுமல்ல உங்கள் பகைகளையும் சுட்டெரிக்கப் பாசமுடன்  வருகின்றேன் ! நீங்கள் மணலைக்  கயிறாக்கும் மந்திரம் கற்றவர்கள் ! உங்கள் பொய்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டு வருகின்றேன் ! நீங்கள்  சாத்தானின் கடையில் சாமான்களை  வாங்கி ஈமானை விற்று  இலாபம் பார்ப்பவர்கள் ! உங்களிடம் அசலைக் கொடுப்பதற்கு  ஆர்வமுடன் வருகின்றேன் ! நீங்கள் நெருப்பை நீரென்று நினைத்து ஏமாறுபவர்கள் ! உங்களிடம் சுவனத்து […]

Read More

வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)

வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா ! காபாவைச் சுற்றிவந்து கைக்குழந்தை ஆகின்றோம் ! ஆனாலும் இங்கே பொய்க்குழந்தையாகவே பொழுதைக் கழிக்கின்றோம் ! அந்தப் பாவத் துருவையும் கூட சுட்டெரிக்கும் உன் நெருப்பில் சாம்பலாக்கி விடுகின்றாய் […]

Read More

ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!! பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்! ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்! இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்! ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்! உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்! ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்! எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்! ஏழ்மையை […]

Read More