வசந்த காலம்

  திருமலர் மீரான்   ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் !   விண்ணவர் குயில்கள் தீன் ராகம் இசைக்க மண்ணகம் தேடும் அபூர்வ காலம் !   கருணை மனுக்களைக் கரங்களில் ஏந்தித் தெளபாவிற்காய் வரிசையாய் நிற்கும் பாவாத்மாக்களின் மனுநீதிக் காலம் !   பாதகச் செயல்களைச் சுமந்து தவிக்கும் ஐம்பொறிகளின் ஓய்வின் காலம் !   இதய தாமரைகள், திருமறைக் கதிர்களால் மலர்ந்து சிறக்கும் உதய […]

Read More

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல் பட்டதா ? நோன்பே தனக்கொரு நோன்பு திறந்ததா வையகம் வாழ்த்தி மெய்யகம் சென்றதா? உயிர் வளர்த்த இறையருட்  பயிர் கதிர் அறுத்ததா களம் நிறைத்ததா ? விழுந்து கிடந்த […]

Read More

மீண்டும் உன் வருகைக்காக !

  பேராசிரியர் திருமலர் மீரான் எம்.ஏ., எம்.ஏ.   வானவர் சூடி மண்ணுலகிற்குப் புனிதப் பயணம் செய்த புண்ணிய ரமலானே !   நரம்பறுந்து கிடந்த மனித வீணைகள் உனது வருகையா லல்லவோ ஆன்மீக ராகம் ! மீட்கத் தொடங்கின !   இலையுதிர் காலத்து இல்லா மரங்களாக வளர் பச்சையுமின்றி வாடிக் கிடந்த இதயங்க ளெல்லாம் இறை வணக்கங்களால் எழுச்சி பெற்றதும் உனைக் கண்ட பிறகுதான் !   உந்தன் வேள்வித் தீயில் புடம் போட்டதால்தான் […]

Read More

ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !

  ’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல் : 9976372229   புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா…? இதோ … ! எதன் வசமோ இருந்த நம் புலன்கள். ரமலானில் தான் நம் வசமாகிறது. எதையோ நிரப்பி வைத்திருந்த கல்பில் (மனதில்) இறை நினைவுகளே… நிரப்பபடுகின்றன. மற்றவை தேவையற்றவையாய்… வெளியேற்றப்படுகின்றன ! எதையோ நேசித்த வாசித்த கண்கள், ரமலானில்… திருமறையை மாத்திரம் வாசிக்கிறது, நேசிக்கிறது. […]

Read More

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

—  கவிஞர் அத்தாவுல்லா — இனிய மாலை நேரம்! இஸ்லாமிய இதயங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னேரம்! புதிய  இளைய  முதற்பிறை எழில் வானத்தில் கோலம் வரையக் காத்திருக்கும் நேரம்! சுவனத்தின் தென்றல் ஒருமாத காலம் பூமியை வலம்வரும் நேரம்! கொடுமைகள் – வன்மைகள் தீமைகள் -பகைமை நரகச் சூடுகள் மாண்டழியும் நேரம்! அலையும் மன சாத்தான்கள் காட்டப்படும் நேரம் ! இந்த பூலோகம் எங்கணும் இறைப்புகழிலும் நபிப் புகழிலும் நிறையும் நேரம்! ஒளுவின் துளிகளில் உண்மைகள் உயிர்க்கும் நேரம்! […]

Read More

ரமலான்

          ( ஹாஜி A. உமர் ஜஃபர் பாஜில் மன்பயீ, முதுவை )   இறைவன் அருளும் அன்பும் இணைத்து இனிதாய் ரமலான் வருகிறது ! – அது கறையைக் கழுகிக் குறையைத் தடுத்துக் கோடிநல் அருளைத் தருகிறது ! கோமான் அருளைத் தருகிறது !!     துஷ்ட்டக் குருவாம் ஷைத்தான் கரத்தில் தடையாய் விலங்கை இடுகிறது ! – அது இஷ்ட்டப் படியிவ் வுலகில் திரியும் இழினிலை யெல்லாம் தடுக்கிறது ! இகழ்வுகள் […]

Read More

புனித ரமலான் நோன்பு !

புனித ரமலான் நோன்பு ! மனித மாண்பின் மகிழ்வு !   ஈமானோர் தீனோர் – ஈது தேடிப்பெற்ற அருட்கொடை !     ஆராய்ந்து நாட்கள் சீராய்ந்து நோன்பை நேராய்ந்து நோற்றோர் – நெறிநிலைப் பெற்றோர் ! கூராய்ந்து அறிவு கொள்கையில் வாழ்ந்து கோமான் நபிகள் ஈமான் தழைக்கலானார் !   ரமளான் என்னும் புனித மாதத்தில் ரஹ்மத் வந்திடுமே – அதன் அமலான நோன்பு நோற்பதால் – மாண்பு ஆனந்தம் வந்திடுமே – தீனின் […]

Read More

என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !

  என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ     அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகின்றேன் ; புகழுகின்றேன் – உன் நிறையருளைத் தொட்டுயிதைத் துவங்குகின்றேன் ! சொல்லாத புகழுரைகள் உனக்குயில்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை உன்புகழுக் கெல்லையில்லை – காக்கும் இறையவனும் உன்னையன்றி எனக்குயில்லை !   […]

Read More

ரமளான் உரை – மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ

ரமளான் உரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ வணங்கிடத் தலையும் – வாழ்த்திட நாவும் தந்தவனே ! இணங்கிட மனமும், வழங்கிடக் கரமும் தந்தவனே ! வல்லவனே … அல்லாஹ் என்னும் தூய இறைவனே ! காலமெல்லாம் உன்னைப் போற்றுகிறேன்! புகழுகிறேன் ! இந்தக் கனிவான ரமளானில் உன் பெயரால் என் கன்னி உரை துவங்குகிறேன் ! அன்பார்ந்த நேயர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. புனித ரமளானின் புனிதத்தை உணர்ந்து […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் உணவகத்தில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்விற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச்.இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத்தின் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து இதுபோன்ற […]

Read More