முதுமையின் முனகல்கள்
(பீ. எம் . கமால், கடையநல்லூர்) நாங்கள் அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கும் உண்டியல்கள் ! எங்களைப் பிள்ளைகளே ! உடைத்து விடாதீர்கள் ! எங்களின் உயிர்ப்பேனா முதுமையை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருக்கும் கசங்கிப் போன காகிதங்கள் நாங்கள் ! அதற்காகப் பிள்ளைகளே ! எங்களை நீங்கள் குப்பைக் கூடையில் எறிந்து விடாதீர்கள் ! உங்கள் மழலை மொழிகளை ரசித்த எங்கள் உளறல் மொழிகளை உதாசீனம் செய்யாதீர்கள் ! நோய் சுமக்கும் சுமைதாங்கி நாங்கள் ! எங்களைப் பாய் சுமக்க விட்டுவிட்டு பதுங்கி விடாதீர்கள் ! பிள்ளைகளே! உங்களுக்கு நாங்கள் நிழலாக இருந்தோம் ! […]
Read More