பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி

இராமநாதபுரம் : தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மு.ஹாஷினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி ஐ.சபீர்பானு அவர்களால் மூவாயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Read More

ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !

அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம். […]

Read More