தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்

   புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம்   எங்கும், கொண்டாடும் திருநாள் ======= இறைவனின் ஆணை, கனவை நனவாக்கினார் தியாக நபி இபுராஹிம் அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை, பாலை தனில் விட்டுச் சென்றார் எங்கும் கொடும் வெப்பம், அக்னியை சுமந்த அனல் காற்று, தனலை தாங்கிய குன்றுகள், தங்கிட குடிலில்லை, இளைப்பாற கூடாரமில்லை, தனிமை சூளலால்  படபடப்பு, யாருமற்ற வெருமையின் தகிப்பு, கொண்டு […]

Read More

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல் பட்டதா ? நோன்பே தனக்கொரு நோன்பு திறந்ததா வையகம் வாழ்த்தி மெய்யகம் சென்றதா? உயிர் வளர்த்த இறையருட்  பயிர் கதிர் அறுத்ததா களம் நிறைத்ததா ? விழுந்து கிடந்த […]

Read More

பெருநாள் கொண்டாடுவோம் !

  ( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )   இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே – ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே ! இல்லைக் குறையே ! – இங்கு யாவும் நிறையே !   இருந்தோம் நோன்பு, இளைத்தோம் மேலே ! எரிந்த மெழுகு வத்தி போலே ! அருந்த மறுத்தோம் அமுதங் கூட அல்லாஹ் உன்றன் அருளைத் தேட ! எங்கள் […]

Read More

அருளைப் பெற்ற பெருநாள் !

பெருநாள் சிறப்புக் கவிதை   அருளைப் பெற்ற பெருநாள் !          ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க – இன்று இறைவனே வழங்கிய ஈதுப்பெருநாள் ! இருப்பவர் இல்லாமை உணர்வுதன்னை – நீக்கி இன்பமும் திருப்தியும் காணும் பெருநாள் !   பசித்ததை, விழித்ததைத்  தனித்த அமலை – இன்று பக்தர்கள் இறையிடம் சொல்லும் ஒருநாள் ! பசித்தவர் பரிசினை இறைவன் தானே – வந்து படைத்திடும் […]

Read More

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் பெருநாள் சந்திப்பு! ——————————————————————————— தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 04-09-2012 அன்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு ஹோட்டல் கிரிஸ்டல் ரெசிடென்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது. மெளலவி அல்ஹாஜ் நூருத்தீன் சகாஃபி கிராஅத் ஓதினார். தொண்டு இயக்க மாநிலத் தலைவர் அல்ஹாஜ் கே.ஏ.மன்சூர் வரவேற்புரை ஆற்றினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி வருகை தந்திருந்த அனைவரையும் […]

Read More

ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்   மதங்கள் கடந்த மாண்பு கொண்டு நல்லிணக்கம் நட்புணர்வு ஈகை வளர்த்து உடலுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி அளித்து உள்ளமெலாம் பூரிப்பை விதைக்கும் நன்னாள்!   பசியின் தாக்கம் அறிய வைத்து தாகத்தின் ஏக்கம் உணர வைத்து புலன்களின் ஆக்கம் கட்டுக்குள் வைத்து புலப்படா புண்ணியங்களை அள்ளிவரும் பொன்னாள்!   […]

Read More

தர்ம பெருநாளே…

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஈமானின் சிந்தனைக்கொண்டு இல்லறங்களில் இனிதாக ஈகை பெருநாளை கொண்டாடுவோம் உறவினர்களுடன் உறவாடி உள்ளங்களை உற்சாகப்படுத்தி எல்லோருக்கும் நல்லது செய்வோம் என்றெண்ணி ஏக இறைவனின் திpருமறையை ஐய உணர்வுடன் தினம் ஒரு மனதுடன் ஓதுவோம்;.. ஓதி வருவோம். உறவுக்கும் திக்கற்றவருக்கும் இரக்கம் காட்டி நம்பிக்கை கொண்டு நற் செயல்கள் செய்வதற்கே அல்லாஹூதலா நற்கூலி கொடுக்கிறான் என்ற நம்பிக்கைக்கொண்டு ”ஈதுல் பித்ரு” அள்ளிக் கொடுப்போம் தர்ம பெருநாளில் மறு உலகிற்கு இங்கே நல்வழி செய்வோம். அல்லாஹ்விற்கு பயந்தும் […]

Read More