ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்
காலத்தின் வேதனையைப் பாடு தற்கும் கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும் ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம் ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும் ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து நடத்துகின்ற நாடகத்தை நவில்வ தற்கும் மூலத்தின் கவிதையெனும் ஒளிவிளக்காய் முகிழ்த்துள்ள பாவலனே வாராய் ! வாராய் ! சிந்தனையாம் தீக்குழம்பில் குளித்தெழுந்து சிறகடிக்கும் கற்பனையில் உலகம் சுற்றி முந்துலகின் முறைமைகளைக் கற்றறிந்து முக்காலத் திரைவிலக்கி முழுமை கண்டு சந்தமெனும் வீணையிலே உயிர்த்துடிப்பைச் சலித்தெடுத்து வாழ்க்கையெனும் சோலை தன்னை […]
Read More