பாரதியார் பிறந்த நாள்
பாரதியார் பிறந்த நாள்.பாரதி என்றொரு பாவலன் வந்தான். பாரதத்தாயின் விடுதலைக்காக பாரதிரும்படி பாடல்கள் தந்தான். பரங்கியரை எதிர்த்து பயமின்றி நின்றான். பனங்கியர்க்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தான். பராசக்தி அன்னையிடம் பக்தி கொண்டிருந்தான். பாரதத்தாயின் மேலும் பக்தி கொண்டிருந்தான். பார்த்தசாரதிமேல் காதல் கொண்டிருந்தான். பறவைகள் கூட நம் சாதி என்றுரைத்தான். பாவையர் சுதந்திரத்திற்கு பலத்த குரல் கொடுத்தான். பாரில் சாதிகள் இல்லையென பகர்ந்தான். பாலருக்கும் பல அறிவுரைகள் தந்தான். பாட்டுக்கொரு புலவன் எனப் பட்டமும் பெற்றான். பாடலியற்றுவோர்க்கெலாம் பாடமாய்த் […]
Read More