பாங்கு
கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள். மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளும் அளிக்க முன் வந்தார். சிரியாவுக்கு கிறிஸ்தவ நகரான ஐலா ஊடாகவே செல்ல வேண்டும். சிறு கூட்டத்துடன் கலீபா ஒட்டகத்திலே பயணஞ் செய்தார். […]
Read More