சீருடை அணிந்திருந்தாலும் பஸ்களில் கறார் கட்டணம் இலவச பஸ் பாஸ் இன்றி படிப்பை கைவிடும் அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அரசு டவுன் பஸ்களில், “யூனிபார்ம்’ அணிந்த மாணவர்களிடம், கட்டாய கட்டணம் பெறப்படுவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பகுதி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், அரசு பஸ்களில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செலவு அதிகரிப்பால், ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கண்டிலான் சேதுபதி கூறியதாவது: சீருடை அணிந்திருந்தாலும், மாணவர்களிடம் கண்டக்டர்கள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கின்றனர். பஸ் பாஸ் இல்லாவிட்டாலும், […]

Read More

பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள் முதுகுளத்தூர் பயணிகள் தவிப்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி பழுதடைந்து நடுரோட்டில் நிற்பதால், குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கிளை டெப்போவில் 46 பஸ்கள் மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. மழை காலங்களில் குடையுடன் பயணிக்க வேண்டி உள்ளது. கோடை காலங்களில் டயர்கள் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கின்றன. சில பஸ்களில் இன்ஜின் பழுதாகி, குறிப்பிட்ட […]

Read More

அரசு பஸ்களில் இ டிக்கெட் வசதி

வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம் ரெயில்களில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட் வசதி இருப்பது போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பஸ்சிற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம். எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர […]

Read More