பாவேந்தர் பரம்பரை

  எம்.எம்.மீரான். பி.எஸ்.சி   ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில் ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை தந்தையும் தாயும் தரணியில் மாண்டார். சின்னவன் என்பினும் சிதைவிலா வண்ணம் சென்றனன் நல்வழி. சேர்ந்தனன் மேன்மை; கற்றவர் போற்றிடும் கல்வியும் கேள்வியும் கற்பனை ஆற்றலும் கவிபுனைந் தாளலும் மற்றுநற் கதைகளும் மன்றிடை முதன்மையும் பெற்றுநற் பெருமையும் உற்றனன் உயர்வையும்; “மின்னல் மீரான்” எனும் புனை பெயருடன் கன்னித் தமிழுடன் கலந்திணைந் தோங்கினன் “திருமலர் மீரான்” […]

Read More