உதைப் பந்து

எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே எல்லைத் தவறா  இனிமைத் தொடையுடன் சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன் வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும் மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும் வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா நில்லா  உதையும் நெடுகிலு  மிந்தப்பா வெல்லம் கலந்த வரிசையாம்  சீர்களில் சொல்லைப் பதித்திடச் செய்யுளின்  வேர்களில் வில்லினு ளம்பாய் விரையு மிலக்கு கல்லி லெழுத்தாய்க் கலக்கு     யாப்பிலக்கணம்:”கலிவெண்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) […]

Read More