கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு   எல்லா உலகும் ஏகமாய் காக்கும் அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் !   வல்லோன் நீயே அருளுடையாளன் ! நல்லோர்க் கென்றும் அன்புடையோனே !   […]

Read More

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த மனிதன் உலகம் உள்ளளவும் உலகினர் உள்ளங்களிலே சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் ! இது நியதி ! உறுதி !! இந்தியப் பூமியைக் கண்டெடுத்த கொலம்பஸ்; விமானத்தைக் கண்டு […]

Read More

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும்

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும். ( டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் ) ஒரு வியாபார நிறுவனத்தில் வேலையாட்கள் – சிப்பந்திகளைப் பல பகுதிகளாகப் பிரித்து மேலாண்மை நடக்கும். அதாவது, பல அங்கங்களாக நிறுவன நிர்வாகம் நடைபெறும். உதாரணத்திற்கு, விற்பனை, உற்பத்தி, வினியோகம், மனிதவளம், போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்ற பகுதிகள் இயக்கப்படும். சில அங்கங்கள் குறிப்பாக சந்தைப்படுத்துதல், விற்பனை போன்றவை வியாபாரத்தின் உயிர்நாடி அவை ஒழுங்காக இயங்காவிட்டால், அல்லது முறையாக […]

Read More

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!

  ( ஆபிதா அதிய்யா )    நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )   முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, […]

Read More

நம்பிக்கை தான் வலிமை.!

                                               திருச்சி   A.முஹம்மது அபூதாஹிர், தோஹா–கத்தார்                                   இங்கு கம்பெனியில் நுழைவுச்சீட்டு சான்றிதழ் படிப்புதான்.., எனினும் சான்று பகர்வது உன்னை சிறந்தவன் என்று உன் கடின உழைப்புதான்…! நம்பிக்கை தான் வலிமை.., நம் கைகள் அதனை வழிமொழிகிறது….! போராட்டங்கள் மட்டும் நடக்காதிருந்தால் நாடுகள் இன்னும் அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்..! ஆராய்ச்சிகள் மட்டும் செய்யாதிருந்தால் உலகம் இன்றும் இருளிலேயேஇருந்திருக்கும்..! முயற்சி மட்டும்   மனிதன் செய்யாமல்இருந்திருந்தால் முழு உலகமும் முட்காடுகளாகவே நிறைந்துஇருந்திருக்கும்..! கஷ்டங்கள் வாழ்வின் கெட்ட காலம் அல்ல, பத்து மாத கஷ்டம் தான் ஒரு பெண்ணை அன்னையாக்குகிறது..! முட்களுக்கு நடுவே தான் ரோஜாக்கள் பூத்து வந்திருக்கின்றன .., வாட்களுக்கு நடுவே தான் ராஜாக்கள் ஆட்சியை காத்துவந்திருக்கிறார்கள்..! நம் விடியல்கள் நம்பிக்கையோடு இருக்கட்டும்.., பொழுது புலரும் முன் நம் கைகள் பணியை செய்துமுடித்திருக்கட்டும்..! Writer Mail id thahiruae@gmail.com

Read More

நம்பிக்கை

நம்பிக்கை உன்னில் கொள், உன்னாற்றல் உலகறியும் ! தும்பிக்கையால் யானைக்கு பலம் நம்பிக்கைதான் உனக்கு பலம் நம்பிக்கைதான் லட்சியத்தின், இலக்கை அடையச் செய்யும் ! நம்பிக்கையை கொள்முதல் செய், அவநம்பிக்கையை விற்று விடு —மூட நம்பிக்கையை விட்டு விடு—இறை நம்பிக்கையில் முக்தி பெற்று, நம்பிக்கையாளராய் உயர்ந்துவிடு சொல்வாக்கிலும் , செல்வாக்கிலும், நம்பிக்கையை காப்பாத்திவிடு நம்பிக்கை துரோகத்தை வீழ்த்து நம்பிக்கையின்மையை போக்கு நம்பிக்கையை துணையாக்கு, நம்பிக்கையால் முன்னேறு நம்பிக்கையை பற்றிபிடி அதுவே உனக்கு வெற்றி படி விருதை மு செய்யது உசேன் ஷார்ஜா

Read More

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி ! ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி ! கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் ! கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் ! கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக் காணிக்கை செய்திடுவான் காமத்தை […]

Read More

வெற்றிக் குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் )

வெற்றிக்குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் ) ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால், ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது […]

Read More

நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும். ‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள். கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி – மழை மிரட்டிப் பார்க்கும். இது போன்ற கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்… அவர் […]

Read More