கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.   சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.   மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம் மற்றும் வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்கள், கல்வியியல், இளைஞர் நலம், நாடகம், குறும்படங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறும்.   நூல்கள் 2012-ல் வெளியானவையாகவும், குறும்படங்கள் 2012-ல் தயாரிக்கப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். […]

Read More

இதய நோய், நீரிழிவில் இருந்து காக்கும் ஸ்ட்ராபெர்ரி

பழங்களில் ஸ்ட்ராபெர்ரிக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. அது ஏதோ தானாக வந்துவிட்டது அல்ல. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள குணநலன்கள் தான் அந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது. அந்த வகையில், இதய நோய் உள்ளவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும், அந்நோய் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தாமல் தடுக்கும் ஆற்றல் ஸ்ட்ராபெர்ரிக்கு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதில்லாமல் இந்நோய்கள் தாக்காமல் இருக்கவும் ஸ்ட்ராபெர்ரி  உதவுவதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

Read More

‘இறைவா, எங்கே போகிறோம்?’

தினமணி தலையங்கம்: ‘இறைவா, எங்கே போகிறோம்?’   வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது. அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை,அவரிடம் நண்பர்களாகப் பழகிய […]

Read More

ஏற்பது இகழ்ச்சி அல்ல!

சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கி, உயர் நீதிமன்றத்திலேயே அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கும் என்று உச்ச […]

Read More