தாலாட்டு

கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம் தழைக்க வந்த கோமேதகம் வள்ளல் வழிச் செல்வி ஆயிஷாவுக்கு                            தாலாட்டு இராகம் : நீலாம்பரி   ‘குன்’னென்ற சொல்லின் குறிப்பால் கொடையளக்கும் பென்னம் பெரியோனின் பேரருளால் வந்துதித்த அன்புக்(கு)கரசி ஆயிஷா தாலேலோ ! அன்னை நிலோஃபரின் ஆருயிரே தாலேலோ !     வண்டலூர் பிறைப்பள்ளி வரலாற்றில் […]

Read More

தாலாட்டு

பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி! பால்மழலை பசியாறி களைத்துறங்கும் வேளையடி! தொட்டிலிலே கண்ணுறங்க தாய்பாடும் தாலாட்டு! மொட்டவிழா மலர்போல கண்ணசையும் சேய்கேட்டு!! தன்குலத்துப் பெருமைசொல்லி தாலாட்டுப் பாட்டுவரும்! நின்னழகைப் புகழ்ந்தபடி நீண்டபல வரிகள் வரும்! உன்முகத்தைப் பார்த்தபின்னே உனக்கு இணை ஏதுமில்லை – என பண்ணசைய கண்ணுறங்கும் பால்நிலவே தாலேலோ!! சொல்லாலே சுகம்தருவாள் அம்மாவின் […]

Read More

தாலாட்டு

தாய்மையின் பாசத்தை காட்டுகின்ற தாலாட்டு முன்னோரின் நிகழ்வினை, நினைவிற்கு கொண்டு வந்து, நயமாக ஏற்றி வைத்து, நளினமாக பாடும் தாலாட்டு! வீர தீர சரித்திரத்தை, சூரமான சம்பவத்தை, கதையினை கானமாக கூறுகின்ற தாலாட்டு! ஏற்றமும் , இறக்கமுமாய், எதுகையும் , மோனமுமாய், செவிகளுக்கு இனிமையுமாய், விருந்தளிக்கும் தாலாட்டு! கானத்தால் ஞானத்தை ஏற்றி, தானத்தை , மானத்தை ஊட்டி, திறத்தை தீரத்தை தீட்டி, பயத்தை பறந்தோட்டும் தாலாட்டு! அறிவினை சலவை செய்து, பக்குவத்தை பதியச் செய்து, சொக்கவைத்து உறங்க செய்யும், சுந்தர மந்திரமே தாலாட்டு! —————————————————————- தாய்மையின் தாலாட்டு ======================== ஆராரோ ஆரிரரோ, ஆரமுதே ஆரிரரோ, அன்பான ஆருயிரே, அழகரே […]

Read More

தாலாட்டு

புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணே –உன் பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும் கண்ணே – அந்த நாமமதில் உறைந்தயொன்று நீயல்ல கண்ணே நாமரூப பேதமில்லா உயர்பொருள் கண்ணே – நீ நாமமதில் அடங்கிடாத மறைபொருள் கண்ணே அனுபவிக்கு யாவையுமே ஆய்ந்துபார் கண்ணே – அதில் ஆன்மீக விளக்கங்கள் கிடைந்திடும் கண்ணே தெளஹீதின் தெளிவில்நீ லயித்திடு கண்ணே – என்றும் லெளஹீக வாழ்விலும்நீ […]

Read More