மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா  1974-ஆம் ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி தேசி நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தர்காவை மறுசீரமைக்கும் திட்டம் 1994 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது. ஹாஜி ஷரஃப்தீன் தலைமையில் அமைந்த 18 உறுப்பினர்களைக் கொண்ட […]

Read More

செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி

“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும். வேறு மொழியினைப் போல் இடம் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியது தமிழ்மொழி. பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் இவ்வாறு சொற்சித்திரமாக வரைந்தார், கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப். செந்தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலும் நாடாளுமன்றத்திலும் முழக்கமிட்டவர், தமிழ்ச் செம்மல் காயிதெ மில்லத். அது […]

Read More

தமிழகத்தில் இஸ்லாம்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.   அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால், உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். […]

Read More

பாதைகள் ———— ஜே.எம். சாலி

பாதைகள் ஜே.எம். சாலி     சபியா வந்திருக்கிறாள். நிரம்பவும் தளர்ந்து போயிருக்கிறாள். நாற்பத்தெட்டு வயதில், சற்று அதிகமாகவே நரையோடி இருக்கிறது. வயதுக்கு வந்த மூன்று பெண்களை வீட்டோடு வைத்திருக்கும் கவலைதான் காரணமோ? அப்துல் கபூர், பார்த்ததும் பார்க்காதது போல் தலையை தாழ்த்திக் கொண்டார். சன்னமான குரலில் “சவுக்கியமா இருக்கிறியா. தங்கச்சி?” என்றார். ‘வந்தக் காரியத்தைச் சொல்லச் சொல்கிறார்’ என்பதைச் சபியா புரிந்து கொண்டாள். அவ்வப்போது, தம்மைத் தேடி வருபவர்களில் சபியாவும் ஒருத்தி என்பதைத் தவிர, அதிகமாக […]

Read More

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி

  ‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.   ‘வித்திய விசாரிணி’க்குப் பல எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது. […]

Read More