சுனாமி
என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள – நீளுமொரு கூட்டம் அங்கே கண்டிருக்கிறேன் அந்தோ….. ஓலங்கள் ………மரண ஓலங்கள் உன்னை சபித்துக்கொண்டிரும் மனித உள்ளங்கள் புரியாத பெயர் சொல்லி -விளையாடும் உன் விளையாட்டின் விலை – ஒன்றுமறியா அப்பாவிகளின் உயிரோ? அசுரமாய் ஆர்ப்பரித்த அலையால் – உன் கொடூர வலையால் – உன் மடியெங்கும் எங்கள் மனித உயிர்கள் என் மனம் கனத்திருக்கிறது……….…….! புதுசுரபி
Read More