நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும், படைப்பும் ஆறு நாட்கள் பயிற்சிப்பட்டறை

நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும், படைப்பும்ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் சிறுகதை வாசிப்பும் படைப்பும் என்னும் பொருண்மையில் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை டிசம்பர் 29, 2024 முதல் ஜனவரி 03, 2025 வரை நடைபெற உள்ளது. பங்கேற்கும் மாணவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து (ISBN) நூலாக […]

Read More

பாதைகள் ———— ஜே.எம். சாலி

பாதைகள் ஜே.எம். சாலி     சபியா வந்திருக்கிறாள். நிரம்பவும் தளர்ந்து போயிருக்கிறாள். நாற்பத்தெட்டு வயதில், சற்று அதிகமாகவே நரையோடி இருக்கிறது. வயதுக்கு வந்த மூன்று பெண்களை வீட்டோடு வைத்திருக்கும் கவலைதான் காரணமோ? அப்துல் கபூர், பார்த்ததும் பார்க்காதது போல் தலையை தாழ்த்திக் கொண்டார். சன்னமான குரலில் “சவுக்கியமா இருக்கிறியா. தங்கச்சி?” என்றார். ‘வந்தக் காரியத்தைச் சொல்லச் சொல்கிறார்’ என்பதைச் சபியா புரிந்து கொண்டாள். அவ்வப்போது, தம்மைத் தேடி வருபவர்களில் சபியாவும் ஒருத்தி என்பதைத் தவிர, அதிகமாக […]

Read More

தேவை இல்லாத உறவு

வானொலி 6 சிறுகதை தேவை இல்லாத உறவு            (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)     என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு படுத்திருக்கிறானே … இந்த குணாவைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லப் போகிறேன் !   குணா ! என் கல்லூரித் தோழன் பெயருக்கேற்ற குணமும் அவனிடம் குடிகொண்டு இருந்தது! […]

Read More

சிறுகதை : பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி )

பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி ) ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே கணக்குத் தீர்த்து ரிலீவிங் ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார்கள். அதைவிட முக்கியம், பத்து வருஷமாய் இந்தக் கம்பெனியின் பாதுகாப்பிலிருந்த விலை மதிக்க முடியாத என்னுடைய டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட் விடுதலையடைந்து என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட்டோடு அடுத்த வாரம் துபாய்க்குப் பறக்க வேண்டும். துபாயில் இதைவிடப் பல மடங்கு சம்பளம் கூடிய வேலையொன்று ஐயாவுக்காக காத்திருக்கிறது. அந்த துபாய்க் கம்பெனியில் […]

Read More

“சிறுகதைகளாகும் சமூக நிகழ்வுகள்’

சிவகாசி, ஆக. 31: சமூகத்தின் நிகழ்வுகளே சிறுகதைகளாக உருவாக்கப்படுகின்றன என தஞ்சாவூர் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் இரா. குருநாதன் பேசினார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை தமிழ்த்துறை சார்பில், நவீன தமிழ்ச் சிறுகதைகள் என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.  நிகழ்ச்சியில், அவர் மேலும் பேசியதாவது:  சமூக நிகழ்வுகளை சற்று ஆழமாக உற்றுநோக்கினால், அனைவரும் அற்புதமான சிறுகதைகளை படைக்கலாம்.  சிறுகதைகள் சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் களமாகக் கொண்டு படைக்கப்படுகின்றன.  நமது […]

Read More