பாலைப் பூக்கள்‏

பாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும் சான்றோர்கள் பங்கேற்றதும் மனதிற்கு மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்! தேன்மதுரத் தமிழோசையை சேதங்கள் எங்கும் பரப்பும் பணியில் தான் வாழ்ந்த துபாய் மற்றும் கத்தாரிலும் தற்போது ஒமன் நாட்டில் மஸ்கட்டிலும் ஓயாமல் தமிழ்ப்பணி ஆற்றிவரும் இதயம் கொண்ட மனிதர் எமது நண்பர் என்பதில் பெருமையுறுகிறோம்! நாடு, மொழி, இனம், மக்கள் அவர்தம் பண்பாடு கலாச்சாரம் […]

Read More

தாலாட்டு

பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி! பால்மழலை பசியாறி களைத்துறங்கும் வேளையடி! தொட்டிலிலே கண்ணுறங்க தாய்பாடும் தாலாட்டு! மொட்டவிழா மலர்போல கண்ணசையும் சேய்கேட்டு!! தன்குலத்துப் பெருமைசொல்லி தாலாட்டுப் பாட்டுவரும்! நின்னழகைப் புகழ்ந்தபடி நீண்டபல வரிகள் வரும்! உன்முகத்தைப் பார்த்தபின்னே உனக்கு இணை ஏதுமில்லை – என பண்ணசைய கண்ணுறங்கும் பால்நிலவே தாலேலோ!! சொல்லாலே சுகம்தருவாள் அம்மாவின் […]

Read More