ஏற்றுங்கள்; போற்றுங்கள்!
கவியரசர் கவிதை….. அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர் முறைதான் பூக்கும் சித்திர வடிவம் காட்டும் செங்கழு நீர்ப்பூப் போல தேயமோர் திருநாள் காண(த்) தங்களை ஈந்தார்; அந்தத் தலைவரை எண்ணும் நாளே மங்கலத் திருநாள்; இன்று வணங்குவோம் அவரை வாழ்த்த. வெடித்தது கருவி; ஆங்கே வீழ்ந்தது குருதி; மண்ணில் துடித்தது ஆவி; ஆயின் தொட்டகை விட்டா ரில்லை பிடித்ததோர் கொடியை மார்பில் பிணைத்தவர் மறைந்தார்; அந்த படித்தளத் தின்மேல் தானே பறக்கின்ற கொடியைக் கண்டோம்! ஏற்றுங்கள் கொடியை வானில்; ஏற்றிடும் போதே நெஞ்சில் போற்றுங்கள் காந்தி என்னும் புண்ணிய மூர்த்தி தன்னை; மாற்றுங்கள் சமுதாயத்தை மாபெரும் பரத நாட்டில் ஆற்றுங்கள் சிறந்த சேவை; அன்னைக்கு மகன்தான் காவல்! இந்தியா பெற்ற வாழ்வு எவரெவர் கைக்கோ சென்று சந்தியில் நின்றார் மக்கள் தாயகம் நினைவா ரில்லை […]
Read More