மதுரை பற்றி..
மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997) பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் தோகைமார்தம் மெல்லடியும் மயங்கி ஒலித்த மாமதுரை – இது மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான் நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ் அழுந்தப் பதிந்த சுவடுகளும் காணக் கிடைக்கும் பழமதுரை – தன் கட்டுக் கோப்பால் இளமதுரை! மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய் மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி – இவை கொள்ளை அடித்த வையைநதி நாளும் ஓடிய நதிமதுரை – நீர் நாட்டிய மாடிய பதிமதுரை தென்னவன் நீதி பிழைத்ததனால் தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள் கந்தக முலையில் எரிந்ததனால் நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று ஜாதிக் கஞ்சும் தென்மதுரை! […]
Read More