கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்
வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டிலும் என்னைத் தொடரும் நிழல் கருவில் வாங்கிய கடன் கண்ணை மூடிய பிறகும் அகல்வதில்லை என் சேமிப்புப் பெட்டி முழுதும் காலிசெய்ய முடியாமல் நிரம்பி வழிகிறது கடன் என் பக்தி கடவுள் கொடுத்த கடனைத் தீர்ப்பதல்ல; புதிய கடனுக்குப் போடும் விண்ணப்பம் கடன் தருவதற்குக் கடனாளிகளிடம் என்ன இருக்கிறது? நமக்குத் தெரிந்ததெல்லாம் கடனை இடம் மாற்றி விடுவதுதான் உடல் சுமப்பது உயிரையல்ல; கடனை
Read More